குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து தமிழகம் முழுவதும் அமைப்புச் சார் மற்றும் அமைப்பு சாரா மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் மாணவர் எழுச்சியைக் கண்டு கல்லூரிகள், பல்கலைகழங்கள் கல்வியகங்களுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை பல்கலைகழகத்தில் குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நாளை முதல் 23ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதே காரணத்திற்காக திருவாரூர் மத்தியப் பல்கலைகழகத்திற்கு ஜனவரி 20ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments