பி.இ படித்தவர்களும் அரசு ஆசிரியர் ஆகலாம்!

பி.இ படித்தவர்களும் அரசு ஆசிரியர் ஆகலாம்!

in News / Education

பி.இ படித்தவர்கள் பள்ளிகளுக்கு கணினி ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பி.இ பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை எதுவும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர், இல்லையென்றால், படித்த துறையை விட்டுவிட்டு வெவ்வேறு துறைகளில் குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்றனர். இதன்காரணமாக அண்மைக் காலமாக பொறியியல் படிப்பதற்கான ஆர்வம் மாணவர்களிடையே வெகுஅளவில் குறைந்து காணப்படுகிறது. மேலும், பொறியியல் மாணவர்கள் குரூப்-2, குரூப்-4 போன்ற போட்டித் தேர்வுகள் எழுதுவதில்தான் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஏற்கனவே பி.இ படித்தவர்கள் பி.எட் படிக்கலாம் என்று தெரிவித்து அதற்காக 20 சதவிகித இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், பொறியியல் மாணவர்கள் பி.எட் படிப்பதற்கு ஆர்வம் காட்டாததால் அது 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டது..

இந்த நிலையில் தமிழக அரசு இன்று (டிசம்பர் 10) வெளியிட்ட அரசாணையில், “பி.இ படிப்பில் எந்த பிரிவை எடுத்து படித்திருந்தாலும் டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதலாம். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணினி ஆசிரியர் ஆகலாம்” என்று தெரிவித்துள்ளது. சமநிலை அந்தஸ்து வழங்கப்படாததால் பி.இ படித்தவர்கள் டெட் தேர்வு எழுத முடியாத நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் பி.இ படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி ஆசிரியர் ஆக சமநிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top