கல்லூரி முன்பு மாணவி தீக்குளிப்பு: மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை!

கல்லூரி முன்பு மாணவி தீக்குளிப்பு: மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை!

in News / Education

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவி, அக்கல்லூரி வளாகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேட்டில் உள்ள பி எஸ் ஜி தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் சினேகா (19). இவர் நேற்று காலை தனது கல்லூரி அருகே திடீரென உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து ஸ்னேஹாவை காப்பாற்ற முற்பட்டனர். ஆனால் தீயானது உடம்பில் வேகமாக பரவியதால் பொதுமக்கள் போராடி தீயை அணைத்தனர்.

பின்னர், மாணவியை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை அரசு மருத்துவமனையில் இருந்து பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் உடலில் 90 சதவீதம் தீக்காயம் உள்ளதால் அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top