ஸ்மார்ட்போனால் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பழக்க வழக்கம், கலாச்சாரம் சீரழிக்கப்பட்டு வருவதாக பலர் தெரிவித்து வரும் நிலையில் பஞ்சாபில் அரசு சார்பாகவே பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக வரும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ஒரு லட்சத்து 6 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வழங்கப்படும் என அவர் கூறியிருக்கிறார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் அரசு தற்போது நிறைவேற்ற உள்ளது. தமிழகத்தில் 11 ஆவது மற்றும் 12 ஆவது படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, மடிக்கணினி வழங்கப்பட்டு வரும் நிலையில் பஞ்சாபில் இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படவுள்ளது.
0 Comments