காவல் துறையால் கைது செய்யப்பட்டு சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நள்ளிரவில் விடுவிக்கப்பட்ட நிலையில் பல்கலைகழக வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் என போராட்டம் நடைபெற்று வரும் சூழ்நிலையில் சென்னை பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 2-வது நாளாக பல்கலை. வளாகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
0 Comments