21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - ராஜஸ்தானை சேர்ந்த மாயன்க் பிரதாப் சாதனை!

21 வயதில் இந்தியாவின் இளைய நீதிபதி - ராஜஸ்தானை சேர்ந்த மாயன்க் பிரதாப் சாதனை!

in News / Education

ராஜஸ்தான் நீதி சேவை 2018 ஆம் ஆண்டிற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று இந்தியாவின் இளைய நீதிபதி என்ற சாதனையை படைத்துள்ளார் மாயன்க் பிரதாப் சிங்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பல்கலைகழகத்தில் நீதித்துறைக்கான 5 ஆண்டு கால எல்எல்பி படிப்பை தொடங்கிய ஜெய்பூரை சேர்ந்த மாயன்க் பிரதாப் (21), 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநில நீதி சேவை தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் இந்திய வரலாற்றிலேயே மிக இளைய வயதில் நீதிபதி என்ற சாதனையை படைத்துள்ளார் மாயன்க்.

நீதிபதிகளுக்கு மக்கள் வழங்கும் மரியாதையும், நியாயமான தீர்ப்பு கிடைத்தவுடன் அவர்களது முகத்தில் காணும் சந்தோஷத்திற்காகவும் தான் இந்த படிப்பை தான் தேர்ந்தெடுத்ததாக கூறும் மாயன்க் பிரதாப் சிங், இளைய வயதில் நீதிபதியாகியுள்ள போதும், தான் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் நீதி சேவை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதற்கான வயது 23ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு தான் அம்மாநில உயரி நீதிமன்றத்தால் இதற்கான வயது வரம்பு 21ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top