பொது மருத்துவம் (MBBS) மற்றும் பல் மருத்துவம் (BDS) ஆகிய பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்காக நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வுக் குழு (NTA) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments