பெண் அதிகாரியை நாற்காலியை தூக்கி அடித்த மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!

பெண் அதிகாரியை நாற்காலியை தூக்கி அடித்த மாணவர்கள் - வைரலாகும் வீடியோ!

in News / Education

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேரியில் காந்தி சேவா நிகேதன் என்ற பள்ளி இயங்கி வருகிறது. இங்கு வந்த ஒரு பெண் அதிகாரியை பள்ளி மாணவர்கள் பலர் சேர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேரியில் காந்தி சேவா நிகேதன் என்ற பள்ளிக்கு குழந்தைகள் நலத்துறை அதிகாரி, மம்தா துபாய் நேற்று சென்றிருந்தார்.

அப்போது, பள்ளியில் இருந்த கேண்டீனில் உள்ள நாட்காலியில் அவர் அமர்ந்திருந்தார். அவரை நெருங்கிய சில மாணவர்கள் அவது கைப்பையை எடுத்து தூர வீசினர். அதை எடுத்துக் கொண்டு வந்த மம்தாவை மீண்டும் மாணவர்கள் தொல்லை செய்தனர்.

அதனால்,பொறுமை இழந்த மம்தா,மாணவர்களிடம் இதுகுறித்துக் கேட்கவே. ஆத்திரமடைந்த
ஒரு மாணவர் அங்கிருந்த பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து, அதிகாரி மம்தாவின் தலையில் ஓங்கி அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து அதிகாரியின் புகாரின் பேரில் , தாக்குதல் நடத்திய மாணவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top