பொங்கல் விடுமுறை தினமான ஜன.16ஆம் தேதி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை பெரும்பாலும் குடும்பத்தினர் ஒன்றினைந்து கொண்டாவது வழக்கம். இதனால், பள்ளி மாணவர்கள் விடுமுறையையொட்டி தாத்தா, பாட்டி என சொந்த பந்தங்களுடன் பொங்கலை கொண்டாட வெளியூர்களுக்கு செல்வதுண்டு.
இந்நிலையில், ஜனவரி 16ஆம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார். பிரதமர் மோடியின் உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதோடு, அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
0 Comments