சுதர்சன பத்மநாபன் உட்பட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பிய சென்னை போலீஸ்

சுதர்சன பத்மநாபன் உட்பட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பிய சென்னை போலீஸ்

in News / Education

சுதர்சன பத்மநாபனை இன்னும் கைது செய்யாதது ஏன், அவரை என் இன்னும் விசாரிக்கவில்லை" என்று கேரள-தமிழக மாணவர்கள் தீவிர போராட்டத்தை எடுத்து வரும் நிலையில், சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு சென்னை போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.

2 நாளைக்கு முன்பு சென்னை வந்த பாத்திமாவின் அப்பா அப்துல் லத்தீப், தமிழக முதல்வர் பழனிசாமி, டிஜிபி திரிபாதி ஆகியோரை சந்தித்து தனது மக்களின் மரணத்தை குறித்து முறைப்படி விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். இப்போது, அவர் சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள இல்லத்தில் தான் தங்கி உள்ளார். இதனிடையே, சென்னை மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி, கூடுதல் துணை ஆணையர் மெகலீனா ஆகியோர் அப்துல் லத்தீப்பிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் அப்துல் லத்தீப் சொல்லும்போது, "பாத்திமாவின் கடைசி 28 நாள் டைரி குறிப்புகள், ஹாஸ்டலில் பாத்திமா உடலை முதலில் பார்த்த நபர் எங்களிடம் போனில் பேசிய ஆடியோ பதிவு.. இதை எல்லாம் அதிகாரிகளிடம் தந்துள்ளேன்.. குற்றவாளிகள் எவ்வளவு பெரிய உயர் நிலையில் இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில், மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதர்சன பத்மநாபன் உள்ளிட்ட 3 ஐஐடி பேராசிரியர்களுக்கு போலீஸ் ஏற்கனவே சம்மன் அனுப்பி உள்ளது. இதனால் பாத்திமா மரண விசாரணை பெரும் பரபரப்பை எட்டி உள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top