எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் எனப்படும் தேசிய தகுதிக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 3ம் தேதி நடைபெறுகிறது.
முன்னதாக நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான அவகாசம் கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்தத் தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டது.
நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும், நாடு முழுவதும் 16 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடக்கும் நீட் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
0 Comments