விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேசிய அளவிலான ரோபோட்டிக்ஸ் போட்டிக்கான தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் 300 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அருப்புக்கோட்டையில் திருச்சியை சேர்ந்த தனியார் ரோபோடிக் நிறுவனம் மூன்று பிரிவுகளாக நடத்திய போட்டியில், 50 அணிகள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களுடன் பங்குபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இப்போட்டியில் கலந்து கொண்டு, மாநில அளவிலான ரோபாட்டிக் கண்காட்சியில் முதலிடத்தை தட்டிச் சென்றது. இதன் தொடர் போட்டிகள் தேசிய அளவிலான போட்டியில் புதுடெல்லியில் நடைபெற்றது. இதிலும் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை டெல்லியில் நடைபெறும் ரோபோட்டிக் கண்காட்சியில் ஏந்தியவாறு சென்றனர்.
மற்ற பள்ளிகள் அனைத்தும் பள்ளியின் பெயரை ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதி இருந்தனர். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு பள்ளி மாணவர்கள் மட்டும் தமிழில் எழுதிய பெயர்ப் பலகையை கையில் உயர்த்தி பிடித்து கம்பீரத்துடன் வலம் வந்தனர். இந்தக் காட்சி தற்போது வலைதளத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது
0 Comments