பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை... சீருடை.

பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை... சீருடை.

in News / Education

மதுரையில் டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குச் சீருடை வேட்டி சட்டை தான்.

இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது. அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது. கதர் வேட்டிதான்.

வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.

பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.

வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள். சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.

திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள். புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை,

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top