ரபேல் போர் விமான விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்வதற்கு உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. இருப்பினும், இதன் மனுதாரர்களான வக்கீல் பிரசாந்த் பூஷண், முன்னாள் மத்திய மந்திரி அருண் ஷோரி ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிடவில்லை என்றாலும், எங்கள் புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ. கடமைப்பட்டுள்ளது. சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தீர்ப்பு எழுதி உள்ளார்.
எனவே, 3 மாதங்களுக்குள், மத்திய அரசிடம் அனுமதி பெற்று, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments