பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் நகரத்தில், பாலின வன்முறைகளுக்கு எதிராக நேற்று ஆயிரக்கணக்காண மக்கள் ஓன்று திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
பிரான்ஸ் நாட்டின் வரலாற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தொடர்ந்து எழுந்து வரும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் ஆர்வலர்கள். இதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடியோடு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அத்தகைய வன்முறைகளில் ஈடுபடும் அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கூறி பாரிஸில் ஆயிரக்கணக்கானோர் நேற்று பேரணியில் ஈடுபட்டனர்.
இந்த ஆண்டில் மட்டும், 130 பெண் ஆர்வாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவருமே கொலை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்றன. பல பெண்கள் தங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளை போலீஸில் புகார் அளித்தாலும், அதை யாரும் ஏற்பதில்லை எனவும், பொறுத்து போவதால் பயனில்லை என்பதை உணர்ந்தே இத்தகைய பேரணியை தொடங்கியுள்ளதாகவும் கூறுகின்றனர் அதில் ஈடுபட்டுள்ளோர்.
0 Comments