குமரி மாவட்டத்தில் 10 அரசு அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

குமரி மாவட்டத்தில் 10 அரசு அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்!

in News / Local

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இதே போல் குமரி மாவட்டத்திலும் 8 தாசில்தார்கள் உள்பட 10 அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நேற்று உத்தரவிட்டார்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தார் தாஜ்நிஷா, ஊசூர் மேலாளர் (குற்றவியல்) பணிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். சிப்காட் (நிலமெடுப்பு) தனி தாசில்தார் ராஜா இலங்கை அகதிகள் பிரிவுக்கும், அரசு கேபிள் டி.வி. தனி தாசில்தார் இன்னேஷியஸ் சேவியர் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதே போல நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) பிரிவு தனி தாசில்தார் சதானந்தன் பறக்கும் படைக்கும், பறக்கும் படை தனி தாசில்தார் ராஜசேகர் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். மேலும் பத்மநாபபுரம் (ஆதிதிராவிடர் நலம்) தனி தாசில்தார் ரமேஷ் அரசு கேபிள் டி.வி.க்கும், தனி தாசில்தார் சுசீலா அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரியாகவும், பத்மநாபபுரம் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) பிரிவு தனி தாசில்தார் சுதா விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதோடு மட்டும் அல்லாது அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரியாக பணியாற்றி வந்த பாண்டியம்மாள் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) பிரிவு தனி தாசில்தாராகவும், விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் விளவங்கோடு தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெகதா பதவி உயர்வு பெற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராக மாற்றலாகி உள்ளார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top