மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் பலி: தமிழக கொரோனா இறப்பை விட அதிகம்

மது கிடைக்காத விரக்தியில் 10 பேர் பலி: தமிழக கொரோனா இறப்பை விட அதிகம்

in News / Local

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 17 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத் டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடிமகன்கள் பத்து நாளைக்கு தேவையான மதுவை வாங்கு குவித்தனர். வசதி இல்லாதவர்கள் 2 நாளைக்கு வாங்கினர். ஆனால் ஊரடங்கு திடீரென 21 நாளாக நீட்டிக்கப்பட்டது. இதை எதிர்பார்க்காத குடிமகன்கள் மது இல்லாமல் தடுமாறினர். குடிக்கு அடிமையானர்கள் பல்வேறு விஷ பரீட்சையில் இறங்கினர். அதன்படி, கடந்த 2ம் தேதி புதுக்கோட்டையில் 3 மீனவர்கள் ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் லோஷனை குளிர்பானத்தில் கலந்து அருந்தினர். இதில் மூன்று பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்த 2 நாட்களிலேயே உயிரிழந்தனர்.

இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்திலும் வார்னிஷை கலவையாக குடித்த 3 பேரும் பலியாகினர். அறந்தாங்கியில் லாரி ஓட்டுநர் ஒருவர் மதுகிடைக்காத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுவரையில் தமிழகத்தில் மொத்தமாக 10 பேர் மது அருந்த முடியாமல் மாற்று போதையை தேர்ந்தெடுத்து பலியாகியுள்ளனர். சிலர் மதுபாட்டில்களை கொள்ளையடிக்கும் அளவுக்கு மாறிவிட்டனர். ஆனால், கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 9 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு பரிசீலனை மேற்கொண்டுவருகிறது. அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதும் நீட்டிக்கப்படும். எனவே அரசும் இல்லத்தரசிகளும் எப்படி குடி அடிமைகளை சமாளிப்பது என்று அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். இதற்கு மது அடிமைகளுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top