100 பவுன், ஐந்து லட்ச ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை ...இளம் பெண் போலீஸில் புகார் .!

100 பவுன், ஐந்து லட்ச ரூபாய் கேட்டு வரதட்சணை கொடுமை ...இளம் பெண் போலீஸில் புகார் .!

in News / Local

100 பவுன் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அழகியபாண்டியபுரம் காட்டுப்புதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்னன் மகள் பால முருகேஸ்வரி (26).இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடி,

ஸ்ரீராமபுரம், அண்ணாநகரை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சிவபாலன் (32 )இவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது 200 பவுன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் வரதட்சணை பேசி பின்னர் 100 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து திருமணம் நடந்துள்ளது.திருமணத்திற்கு பின்னர் கூடுதலாக 100 ரூபாய் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு மனைவி பாலமுருகேஸ்வரியை,

கணவர் சிவபாலன் மற்றும் அவரது தந்தை சுந்தர்ராஜ்(67) தாயார் பாலச்சந்திரா (58), மகன் செந்தில் குமார்(35) ஆகியோர் கொடுமைபடுத்தியதாக பால முருகேஸ்வரி நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top