வெளிநாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்த போது புயலில் சிக்கி குமரி மீனவர் உள்பட 11 பேர் காணவில்லை!

வெளிநாட்டில் ஆழ்கடலில் மீன்பிடித்த போது புயலில் சிக்கி குமரி மீனவர் உள்பட 11 பேர் காணவில்லை!

in News / Local

குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த மீனவர் சிலுவைதாசன், வயது 59. இவர் ஏமன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். கடந்த 17-ந் தேதி அப்துல் ஹமீது என்ற அரேபியரின் விசைப்படகில் சிலுவைதாசன், ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாழையை சேர்ந்த கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன், மற்றொரு காசிலிங்கம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 6 மீனவர்கள் என மொத்தம் 11 பேர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 23-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்க ஆழ்கடலுக்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட புயலில் அவர்களுடைய படகு சிக்கியுள்ளது. இந்த புயலில் 11 மீனவர்களும் படகோடு மாயமாகியுள்ளனர். இதுவரை கரை திரும்பாததால் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. இதையறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் மாயமான மீனவர்களை உடனடியாக விரைந்து கண்டுபிடித்து மீட்குமாறு தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில் சிலுவைதாசனின் மனைவி புஷ்பலீலா மற்றும் அவருடைய மகன், மகள், உறவினர்கள் ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அப்போது, வெளிநாட்டில் கடலில் மாயமான மீனவர்களை கண்டுபிடித்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு புஷ்பலீலாவும், அவருடைய பிள்ளைகளும் கண்ணீர் மல்க கூறினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top