ஈத்தாமொழி அருகே பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு

ஈத்தாமொழி அருகே பெண்ணிடம் 11 பவுன் சங்கிலி பறிப்பு

in News / Local

ஈத்தாமொழி அருகே இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்த செல்லபெருமாள் மனைவி கனக புஷ்பம் (வயது 66). இவர் நேற்று முன்தினம் இரவு உணவு சாப்பிட்ட பின்பு கை கழுவுவதற்காக வீட்டின் வெளியே சென்றார்.

அப்போது, இருட்டான பகுதியில் பதுங்கி இருந்த மர்ம நபர் திடீரென பாய்ந்து கனக புஷ்பத்தின் கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த கனக புஷ்பம் ‘திருடன்... திருடன்...’ என சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த மகன் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து நகையுடன் தப்பி ஓடி விட்டார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top