குமரியில் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட 119 வேட்புமனு தாக்கல்

குமரியில் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட 119 வேட்புமனு தாக்கல்

in News / Local

குமரி மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட 119 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற தொகுதியில் 23 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.

குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கும், காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கும் வேட்புமனு தாக்கல் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஒருவரும், 15-ந் தேதி 2 பேரும், 16-ந் தேதி 4 பேரும், 17-ந் தேதி 17 பேரும், நேற்று முன்தினம் 50 பேரும் என மொத்தம் 74 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நிறைவு நாளான நேற்று 65  வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. அதாவது கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் 10, நாகர்கோவில் சட்டசபை தொகுதியில் 11 , குளச்சல் சட்டசபை தொகுதியில் 15 , பத்மநாபபுரம் சட்டசபை தொகுதியில் 11, விளவங்கோடு சட்டசபை தொகுதியில் 11, கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் 6 என மொத்தம் 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. இதே போல கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட 11 வேட்புமனு தாக்கல் செய்தனர்.

அதன்படி குமரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு மொத்தம் 99 வேட்பாளர்கள் 119 வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். அதாவது கன்னியாகுமரி-21, நாகர்கோவில்-28, குளச்சல்-15, பத்மநாபபுரம்-22, விளவங்கோடு-17, கிள்ளியூர்-16 ஆகும்.

நாடாளுமன்ற தொகுதிக்கு 23 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு சேர்த்து மொத்தம் 142 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனு பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 22-ந் தேதி ஆகும்.

 

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top