மேலும் 12 பேருக்கு தொற்று: குமரியில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியது!

மேலும் 12 பேருக்கு தொற்று: குமரியில் கொரோனா பாதிப்பு 200-ஐ தாண்டியது!

in News / Local

சென்னை உள்பட வெளிமாவட்டம், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்களால் குமரியில் தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ரெயில் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் ஆவர். அதன் விவரம் வருமாறு:-

நெய்யூர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த 31 வயது வாலிபர், நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த 30 வயது வாலிபர், வெள்ளாங்கோடு செம்மங்காலைவிளையைச் சேர்ந்த 25 வயது வாலிபர், ஐரேனிபுரத்தைச் சேர்ந்த 24 வயது வாலிபர், மாங்கரை கல்லுவிளையைச் சேர்ந்த 44 வயது ஆண்,

தூத்தூரைச் சேர்ந்த 37 வயது ஆண், அவருடைய 3 வயது மகன், உறவினரான 62 வயது முதியவர், படந்தாலுமூடு சேனங்கோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், நாகர்கோவிலைச் சேர்ந்த 67 வயது முதியவர், மடிச்சல் நெல்லுவிளையைச் சேர்ந்த ஒரு ஆண், மெதுகும்மல் தாணிவிளை வீடு பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி என 12 பேருக்கு தொற்று ஏற்பட்டது.

தூத்தூர் பகுதியில் ஒரு நர்சிங் மாணவிக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் அங்குள்ள 3 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 4 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இவர்கள் 4 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

ஒருவர் முழுமையாக குணம் அடைந்த பிறகும் அவருடைய 12 வயது, 6 வயது, 5 வயது குழந்தைகள் கொரோனா தொற்றுடன் தொடர்ந்து ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் டிஸ்சார்ஜ் ஆக விரும்பவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top