மார்த்தாண்டம் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்!

மார்த்தாண்டம் பகுதியில் விதிமீறி இயக்கப்பட்ட 12 வாகனங்கள் பறிமுதல்!

in News / Local

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் உரிய அனுமதி சீட்டு பெறாமல் இயங்கிய 3 ஆம்னி பஸ்கள் சிக்கின. உடன டி யாக அவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகனங்களுக்கு தலா 40 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

இதேபோல கேரள பதிவெண் கொண்ட ஒரு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் சென்ற 4 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தகுதிச்சான்று இல்லாமல் இயங்கிய 4 வாகனங்கள், ஒரு பஸ் பறிமுதல் செய்யப்பட்டு கோழிப் போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top