கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

in News / Local

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது தொடர்கதையாகி விட்ட நிலையில் இதை தடுப்பதற்காக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் குமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் ரெயிலில் ஏறி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பெட்டியில் இருக்கைகளுக்கு அடியிலும், மற்றும் கழிவறையிலும் சிறு சிறு மூடைகள் கிடந்தன. இந்த மூடைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த அரிசியை யாரோ மர்ம நபர்கள் ரெயில் மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்றுள்ளனர். ஆனால் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

இதைத் தொடர்ந்து அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் மொத்தம் 1,200 கிலோ அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவற்றை கோணத்தில் உள்ள அரசு குடோனில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top