குமரியில் போக்குவரத்து விதி மீறியதாக 1,596 வழக்குகள் பதிவு!

குமரியில் போக்குவரத்து விதி மீறியதாக 1,596 வழக்குகள் பதிவு!

in News / Local

குமரி மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் ஒரே நாளில் 1,596 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கும் வகையில், போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளுமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கடந்த இரு நாட்களாக வாகன சோதனை நடத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்டத்திலும் ஷிப்ட் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தி வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். கடந்த 3ம் தேதி (சனி) நடந்த வாகன சோதனையில் மொத்தம் 984 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 600க்கும் மேற்பட்ட டோர், ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கி அபராதம் செலுத்தினர். நேற்று முன் தினமும் (ஞாயிறு) மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி, அபராதம் வசூலிக்கப்பட்டது . விடுமுறை தினம் என்பதால் அதிகளவில் இளைஞர்கள், இளம்பெண்கள் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கினர். போலீஸ் சோதனையில் சிக்காமல் சில இளைஞர்கள் சிட்டாக பைக்கில் பறந்தனர். மாவட்டம் முழுவதும் முக்கிய சந்திப்புகளில் காலை, மாலை, இரவு என நேற்று அதிகாலை வரை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐ.க்கள் மற்றும் போலீசார் அனைவரும் வாகன சோதனையில் தீவிரம் காட்டியதால், போலீஸ் நிலையங்களில் புகார் மனுக்கள் எதுவும் விசாரிக்கப்படவில்லை . காவல் நிலையங்களுக்கு வந்தவர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த வாகன சோதனையில் மொத்தம் 1,596 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதிக பட்சமாக குளச்சல் துணை போலீஸ் சரகத்தில் 550 வழக்குகளும், கன்னியாகுமரி துணை போலீஸ் சரகத்தில் 539 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. நாகர்கோவில் துணை போலீஸ் சரகத்தில் 215 வழக்குகளும், தக்கலையில் 292 வழக்குகளும் பதிவு செய்யப்பட் டன.

இவற்றில் ஹெல்மெட் அணியாமல் வந்து சிக்கியவர்கள் 1,067 பேர் ஆவர். அதிகபட்சமாக கன்னியாகுமரி துணை போலீஸ் சரகபகுதியில் 364 பேர் சிக்கினர்.குளச்சல் சரகத்தில் 311பேரும், தக்கலை சரகத்தில் 222 பேரும், நாகர்கோவில் சரகத்தில் 70 பேரும் ஹெல்மெட் இல்லாமல் வந்து அபராதம் செலுத்தினர்.ஹெல்மெட் தவிர குடிபோதையில் 11 பேர், பைக்கில் டிரிபிள்ஸ் 20 பேர், காரில் சீட் பெல்ட் அணியாமல் வந்த 158 பேர், லைசென்சு இல்லாமல் கார், பைக் ஓட்டி வந்த 74 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி வந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு, அதிக வெளிச்சத் துடன் கூடிய லைட் உள்ளிட்ட பிற காரணங்களின் அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யப்பட் டன. தொடர்ந்து வாகன சோதனை நடத்தப்படும் என போலீசார் கூறி உள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top