குளச்சல் அருகே 2 பைக்குகள் திருட்டு!

குளச்சல் அருகே 2 பைக்குகள் திருட்டு!

in News / Local

குளச்சல் அருகே பாலப்பள்ளத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினோ (3 3). சம்பவத்தன்று காலை இவர் தனது பைக்கை குளச்சல்பள்ளி ரோட்டில் நிறுத்தி விட்டு வேலைக்கு சென்றார். மாலை வேலை முடிந்து வந்து பார்த்த பொது அவரது பைக்கை காணவில்லை. இது குறித்து வினோ குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மணவாளக்குறிச்சி அருகே சரல்உரப்பனவிளையை சேர்ந்தவர் தவசிபெருமாள் (44). சம்பவத்தன்று வீட் டின் முன்புள்ள பஸ் ஸ்டாப்பில் பைக்கை நிறுத்தி சென்றார். திரும்பி வந்த போது பைக்கை காணவில்லை . இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் தவதிபெருமாள் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக்கை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top