நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு பேரை தாக்கிய பயணிகள்

நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு பேரை தாக்கிய பயணிகள்

in News / Local

நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த இரண்டு பேரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில், இரண்டு பேர் குடிபோதையில் அமர்ந்திருந்தனர். அவர்கள் பயணிகளிடம் பணத்தை பறிக்கும் கும்பலை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் இரண்டு பேரையும் பயணிகள் சிலர் சரமாரியாக தாக்கினர். இதைக்கண்ட அங்கிருந்த நபர் தாக்குதலை தடுக்க முயன்றுள்ளார், இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அவரையும் தாக்கினர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், குடிபோதையில் இருந்த இருவரையும் பயணிகள் ஒப்படைத்தனர். எனினும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தாமல் எச்சரித்து அனுப்பியதால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top