வரி செலுத்தாமல் இயங்கி வந்த கேரளா ஆம்னி பஸ்களுக்கு 70 ஆயிரம் அபராதம்!

வரி செலுத்தாமல் இயங்கி வந்த கேரளா ஆம்னி பஸ்களுக்கு 70 ஆயிரம் அபராதம்!

in News / Local

உரிய வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த 2 ஆம்னி பஸ்களை வட்டார போக்குவரத்து அதிகாரி பறிமுதல் செய்து அபராதம் விதித்தார்.

குமரி மாவட் டத்தையொட்டியுள்ள கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான ஆம்னி பஸ்கள் தமிழகம் வழியாக இயக்கப்படுகின்றன. சில பேருந்துகள் முறையாக வரி செலுத்தாமல் இங்கு இயக்கப்படுகின்றன. குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், சுற்றுலா செல்வோருக்காக வாகனங்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூ றப்படுகிறது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன,

இந்த நிலையில் நேற்று - அதிகாலையில் மார்த்தாண் டம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரள பதிவெண் கொண்ட 2 ஆம்னி பஸ்கள் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்ல கருங்கல் பகுதிக்கு வந்தது. அந்த புஷ்கலை நிறுத்தி சோதனையிட போது முறையாக வரி செலுத்தாமல், தமிழகத்தி இயக்க அனுமதி சீட்டு பெறாமல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பஸ்களையும் பறிமுதல் செய்து கோழிப்போர்விளையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இரு வாகனங்களுக்கும் தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top