குமரி மாவட்டம் இரணியல் அருகே திருட்டு மது விற்ற 2 பேர் கைது!

குமரி மாவட்டம் இரணியல் அருகே திருட்டு மது விற்ற 2 பேர் கைது!

in News / Local

இரணியல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிகாலை வேளையில் டாஸ்மாக் மதுபானத்தை பதுக்கி வைத்து சிலர் திருட்டுத்தனமாக விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தாது.

இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் இரணியல் போலீசார் தலக்குளம், திங்கள் சந்தை பகுதியில ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது, திங்கள் சந்தை பூசாஸ்தான்விளை பகுதியில் ராஜேஷ் என்பவர் திருட்டுத்தனமாக டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 பாட்டில்களை பறிமுதல் செய்தனர், இதேபோல் தலக்குளம் பகுதியில் மது விற்ற கணபதி என்பவரை கைது செய்த போலீசார் அவரி டம் இருந்து 10 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top