களியக்காவிளை அருகே பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 2பைக் தீவைத்து எரிப்பு!

களியக்காவிளை அருகே பிஎஸ்என்எல் அதிகாரி வீட்டில் 2பைக் தீவைத்து எரிப்பு!

in News / Local

களியக்காவிளை அருகே தையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் ஷிபு(45). இவர் மூவோட்டு கோணம் பகுதியில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் வீட்டில் படுத்துள்ளார். நள்ளிரவு நேரத்தில் இவரது வீட்டின் கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டனர்,
சத்தம் கேட்டு எழுந்து வந்த ஷிபு பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைத்தார்,

தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனங்களுக்கு ஏதாவது விஷமிகள் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top