குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது!

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது!

in News / Local

குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று அதிகாலை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், பெலிக்ஸ் ஆகியோர் புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, புதுக்கடையில் இருந்து தேங்காப்பட்டணம் கடற்கரை சாலையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் சிறு, சிறு மூடைகளாக 700 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது தெரியவந்தது .

மேலும், காரில் இருந்த கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த அபிலாஷ் (வயது 31), பிபின் (27) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அபிலாஷ், பிபின் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ரே‌ஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார் அரிசியை காப்புக்காடு அரசு கிடங்கிலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top