குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது

in News / Local

அழகியபாண்டியபுரம் செந்திப்பாறை பகுதியை சேர்ந்தவர் மகே‌‌ஷ் (வயது 25). இவர் மீது கோட்டார், தக்கலை மற்றும் வடசேரி போலீஸ் நிலையங்களில் கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மகே‌‌ஷ் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். கலெக்டரின் உத்தரவுபடி மகேசை கோட்டார் போலீசார் நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

ஈத்தாமொழி கீழ்வீரயன்விளையை சேர்ந்தவர் அபிசாந்த் (23). இவர் மீது ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி ஆகிய போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. அபிசாந்த் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கலெக்டர் உத்தரவுபடி ராஜாக்கமங்கலம் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top