கன்னியாகுமரி மாவட்டத்தில் மநீம கூட்டணிக்கு 20 ஆயிரத்து 517 வாக்குகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மநீம கூட்டணிக்கு 20 ஆயிரத்து 517 வாக்குகள்

in News / Local

குமரி மாவட்டத்தில் 6 சட்ட மன்ற தொகுதி மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் மற்றும் அதன் கூட்டணி 20 ஆயிரத்து 517 வாக்குகள் பெற்றுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையம்,சமக, மற்றும் ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மையம் கூட்டணக 11 ஆயிரத்து 981 வாக்குகள் பெற்றுள்ளது.

இதில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பிடி செல்வகுமார் 3,109 வாக்குகளும், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் மரிய ஜேக்கப் ஸ்டேனி 3,913 ஓட்டுக்களும், பத்மநாபபுரம் தொகுதி வேட்பாளர் ஜெயராஜ் 981 வாக்குகளும், குளச்சல் தொகுதி வேட்பாளர் லதீஷ் மேரி 2,127 ஓட்டுகளும் விளவங்கோடு வேட்பாளர் ராஜ்குமார் 637 வாக்குகளும், கிள்ளியூர்தொகுதி சமக வேட்பாளர் அந்தோணி 1214 வாக்குகளும் என 6 வேட்பாளர்களும்,கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சுபாசார்லஸ் 8 ஆயிரத்து 536 வாக்குகள் பெற்றார்.மொத்தம் 20 ஆயிரத்து 517 வாக்குகள் பெற்றுள்ளனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top