சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த 22 பேரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுரை!

சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த 22 பேரை வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க அறிவுரை!

in News / Local

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அங்கிருந்து தினமும் ஏராளமானவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் களியக்காவிளை, ஆரல்வாய்மொழி ஆகிய சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ் நேற்று காலை நாகர்கோவில் வந்தது. அதில் 22 பேர் இருந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே இறக்கி விடப்பட்டனர். அவர்களிடம் தாசில்தார் அப்துல் மன்னான் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 22 பேரும் ஏற்கனவே சென்னையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. எனவே தான் அவர்கள் அங்கிருந்து இ-பாஸ் பெற்று நாகர்கோவில் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களின் முகவரி மற்றும் செல்போன் எண், ஆதார் எண் ஆகியவற்றை வாங்கிய அதிகாரிகள் நேற்று முதல் 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். 22 பேரின் வீடுகளிலும் ஸ்டிக்கர் ஒட்டி கண்காணிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top