கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை கும்பல் முகாமிட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் நாகர்கோவில் பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
அப்போது, வடசேரி பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த 3 நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது 3 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் அவர்கள் வைத்து இருந்த பைகளை போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் 1 கிலோ கஞ்சா வைத்து இருந்தும் 3 பேரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, வடசேரி போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் அவர்கள் 3 பெரும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஊசி மணிகண்டன், சதீஷ் மற்றும் பாபு என்பதும் இவர்கள் 3 பேரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கஞ்சா எப்படி கிடைத்தது, வேறு யாராவது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments