3 ஆடுகளை கடித்துக் கொன்ற செந்நாய் கூட்டம்!

3 ஆடுகளை கடித்துக் கொன்ற செந்நாய் கூட்டம்!

in News / Local

பூதப்பாண்டி அருகே பெருந்தலைகாடு பதியை சேர்ந்தவர் குமார். கூலிதொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. இவர்கள் ஆடுகள் வளர்த்து வருகின்றனர்.

அவர்கள் வளர்த்து வந்த 5 ஆடுகளை நேற்று காலை வீட்டின் அருகே உள்ள வயல் வெளி பகுதியில் மஞ்சு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது உலக்கை அருவி மலைப் பகுதியில் இருந்து 8 செந்நாய் கூட்டமாக வந்தது. அவை மேய்ந்து கொண்டு இருந்த ஆடுகளை விரட்டி கடித் தது. இதில் 3 ஆடுகளை செந்நாய்கொன்று தின்றது. இதனை பார்த்த மஞ்சு அதிர்ந்து போய் சத்தம் போட்டார். ஆனால் செந்நாய்கள் அங்கிருந்து செல்லவில்லை. மஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து செந்நாய்கள் மீது கற்களை வீசி விரட் டினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top