கன்னியாகுமரி அருகே ஐம்பொன் சிலை மாயமான வழக்கில் 3 பூசாரிகள் போலீசில் சிக்கினர்!

கன்னியாகுமரி அருகே ஐம்பொன் சிலை மாயமான வழக்கில் 3 பூசாரிகள் போலீசில் சிக்கினர்!

in News / Local

கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள பிள்ளையார்குளத்தில் கடந்த 4-ந் தேதி மீனவர் வலையில் சுமார் 2 அடி உயர பத்திரகாளி அம்மன் ஐம்பொன் சிலை சிக்கியது. பொதுமக்கள் அந்த சிலையை அருகில் உள்ள ஒரு கோவிலில் வைத்து வழிபட்டனர். அப்போது, அந்த கோவில் பூசாரி சிலை கோவிலில் இருந்தால் பாதுகாப்பாக இருக்காது எனவே சேலையை தனது வீட்டில் பூஜை அறையில் வைத்து கொள்வதாக கூறி தூக்கிச்சென்றார். இந்தநிலையில் அந்த சிலை மாயமானதாக பூசாரி தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஐம்பொன் சிலை வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே, அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், போலீசார் ஐம்பொன் சிலை மாயமானது தொடர்பாக 3 பூசாரிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மேலும் முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அந்த 3 பூசாரிகளின் பெயர் விவரங்களை கூற போலீசார் மறுத்துவிட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top