மார்த்தாண்டத்தில் பரபரப்பு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது!

மார்த்தாண்டத்தில் பரபரப்பு கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது!

in News / Local

மார்த்தாண்டம் பகுதியில் கடந்த சில நாட்களாக, கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல், போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக உளவுப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. அந்த கும்பலை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர், உளவுப்பிரிவு ஏட்டு ராஜமணி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை ஓன்று அமைக்கப் பட்டது. தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

நேற்று காலை 7 மணியளவில் மார்த்தாண்டம் காந்தி மைதானத்துக்கு 5 பேர் வந்தனர். அவர்கள் அங்கு நின்ற ஒரு காரை வாடகைக்கு அழைத்தனர். குலசேகரம் அருகே திருவரம்பு பகுதிக்கு சென்று விட்டு திரும்பினர். அப்போது வாடகை பணமாக ரூ.500 கொடுத்தனர். அந்த பணம் வழக்கமாக புழக்கத்தில் உள்ள பணத்தை விட மாறுபட்டு இருந்ததை காரின் டிரைவர் கவனித்தார்..

உடனடியாக இதுபற்றி மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமை யிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கார் டிரைவரிடம் இருந்த பணத்தை வாங்கி பார்த்தனர். அது கள்ளநோட்டு தான் என்பதாய் உறுதி செய்தனர். மேலும் காரை வாடகைக்கு அழைத்து சென்ற 5 பேர் அந்த பகுதியில் நின்றனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருவனந்தபுரம் கோட்டூர் சவுதாமூட்டை சேர்ந்த சாவுத் (வயது 24), மாங்கோடு அம்பலக் கடையை சேர்ந்த மணி (51), மணவாளக் குறிச்சியை சேர்ந்த சிபு என்ற சாமி (45), திருவரம்பு தெங்குவிளையை சேர்ந்த ஜேக்கப் (46), மணலிக்கரை காஞ்சான்காடு ஜெஸ்டின் ஜெயசேகர் (39) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதன் விவரம் வருமாறு:-

போலீசாரிடம் சிக்கிய 5 பேரும், அம்பலக்கடையில் உள்ள மணி வீட்டில் தனியாக ஒரு அறையில் கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளனர். அப்படி தயாரிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை சாவுத் வீட்டில் ரகசியமாக பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை சிபு, ஜேக்கப், ஜெஸ்டின் ஜெயசேகர் ஆகியோர் குமரி மாவட்டம் மற்றும் , கேரளத்தில் புழக்கத்தில் விடும் வேலையை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து சாவுத் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து சாவுத் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு 200, 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.77 ஆயிரம் ஆகும். மேலும் கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கைதான சாவுத்துக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இவர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் போதை பொருட்களை கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் சப்ளை செய்தது தெரிய வந்துள்ளது. இதற்காக குமரி மாவட்டத்தை சேர்ந்த பெண்களை விமானம் மூலம் மும்பைக்கு அனுப்பி வைப்பதும், டிப்- டாப்பாக உடை அணிந்த அந்த பெண்கள் திரும்ப வரும்போது உள்ளாடைகளில் போதை பொருட்களை மறைத்து வைத்து ரெயில் மூலம் கடத்தி வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படி போதை பொருட்களை கடத்தி வரும் பெண்களுக்கு பல லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்து வந்துள்ளார்.

தற்போது கூட 10 டிப்-டாப் பெண்களை மும்பைக்கு அனுப்ப தயார் நிலையில் வைத்திருந்தும் தெரிய வந்துள்ளது. மேலும் சாவுத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்ட மிட்டு ள்ளனர். அப் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு உள்ள தாகவும் கூறப்படுகிறது.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top