கொல்லம் அருகே கடலில் மூழ்கிய குமரி மீனவர்கள்!

கொல்லம் அருகே கடலில் மூழ்கிய குமரி மீனவர்கள்!

in News / Local

சூறை காற்று காரணமாக படகு கவிழ்ந்து, குமரியை சேர்ந்த 5 மீனவர்கள் கடலில் மூழ்கினர். இவர்களில் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை முதல் திடீரென சூறை காற்றுடன் கன மழை பெய்தது. குமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளிலும் பலத்த சூறைகாற்று வீசியது. இதனிடைேய, குமரி மாவட்டம் நீரோடியை சேர்ந்த ஸ்டான்லி (47), ஜாண்போஸ்கோ (46), சகாயம் (32), நிக்கோலஸ் (40), ராஜூ (50) ஆகியோர், கேரள கடலில் மீன் பிடிக்து விட்டு. நேற்று முன்தினம் மாலையில் கரைக்கு வந்து கொண்டு இருந்தனர். இரவு 11.30 மணியளவில் இவர்கள் கேரள துறைமுகத்தை நெருங்கிய வேளையில் காற்று வேகமாக வீசியது. இதனால் கரையை நெருங்க முடியாமல் படகை நங்கூரமிட்டு காத்திருந்தனர்.

நேற்று காலையில் வீசிய சூறை காற்றில் படகு துறைமுக தடுப்பு சுவரில் மோதி உடைந்து கிடந்தது. அதில் இருந்த 5 மீனவர்களின் நிலை என்னவானது என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து சக மீனவர்கள் மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், மாலை 3 மணியளவில் மாயமான ஸ்டான்லி, நிக்கோலஸ் ஆகிய மீனவர்கள் நீந்தி கரை சேர்ந்தனர். மற்ற 3 பேரின் கதி என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top