திருவட்டார் பரளியாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த ஆராட்டு பீடம் கண்டுபிடிப்பு!

திருவட்டார் பரளியாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த ஆராட்டு பீடம் கண்டுபிடிப்பு!

in News / Local

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஐப்பசி மாத திருவிழா நடைபெறும் போது சாமி ஆராட்டுக்காக தளியல் முத்தாரம்மன் கோவில் அருகிலுள்ள பரளியாற்றில் எழுந்தருள்வது வழக்கம். ஆராட்டு விழா நிறைவடைந்த பிறகு கருடாழ்வார் கோவிலில் சாமி அமர்ந்து செல்லும். இந்தநிலையில் தளியல் பகுதியில் பரளியாற்றில் புதர்கள் மண்டிக்கிடந்ததால் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆற்றில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆற்றுப் பகுதியில் சுமார் 4 அடி அகலம் 4 அடி நீளம் கொண்ட கல் பீடம் ஒன்றை கண்டுபிடித்தனர். இந்த பீடம் ஆதிகேசவ பெருமாளுக்கான ஆராட்டு பீடம் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மறைந்து போயிருக்கக் கூடும் என்றும் தெரிகிறது.

இதுகுறித்த தகவல் அப்பகுதியில் வேகமாகப் பரவியது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு ஆராட்டு பீடத்தைப் பார்வையிட்டனர். மேலும், திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் அலுவலர்கள், வருவாய்த்துறையினர், இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன், மாவட்ட செயலாளர் ரவி, திருவட்டார் ஒன்றியத் தலைவர் வினில்குமார் உள்பட பலரும் வந்து கண்டெடுக்கப்பட்ட பீடத்தை பார்வையிட்டனர்.

இது குறித்து ஆதிகேசவா சேவா அறக்கட்டளை தலைவர் அனந்த கிருஷ்ணன் கூறியதாவது:-

தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள பீடம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கி மறைந்து போயிருக்கலாம். தேவசம்போர்டு அதிகாரிகள் இந்தப் பீடத்தை முழுமையாக மீட்டு, அதில் கல்வெட்டுத் தகவல்கள் இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். என கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top