தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்!

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்!

in News / Local

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகரில் மருத்துவக்கல்லூரிகள் அமைகின்றன. 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை தலா ரூ.325 கோடியில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு தலா ரூ.195 கோடியும், மாநில அரசு தலா ரூ.130 கோடியும் வழங்கும்.

6 புதிய மருத்துவக் கல்லூரிகளால் தமிழகத்திற்கு கூடுதலாக 900 எம்பிபிஎஸ் சீட்கள் கிடைக்கும். 900 இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கு 15% பிற மாநிலத்தவருக்கும் வழங்கப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து முஸவர் பழனிசாமி பிரதமர் மோடி மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதிவுலார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top