நாகர்கோவிலில் ரயிலில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

நாகர்கோவிலில் ரயிலில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

in News / Local

பறக்கும் படை தனி தாசில்தார் சதானந்தன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார், ஓட்டுநர் டேவிட் ஆகியோர் கொண்ட குழு நேற்று மதியம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் கட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியை உரிமை கோருபவர் யாரும் இல்லை. அரிசியை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வரப்பட்டதாக தெரிய வருகிறது. அந்த அரிசியை பறிமுதல் செய்து கோணம் அரசுகிட்டங்கியில்
அடைத்தனர்.

இதேபோல் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து சுமார் 20கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top