மார்த்தாண்டத்தில் விவாகரத்தான இளம் பெண்ணிடம் காதல் வலையை விரித்து மோசடி

மார்த்தாண்டத்தில் விவாகரத்தான இளம் பெண்ணிடம் காதல் வலையை விரித்து மோசடி

in News / Local

கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்த பெண்ணிடம் முகநூல் மூலம் பழக்கத்தை ஏற்படுத்தி திருமணம் செய்வதாக கூறி, ஏமாற்றிய வாலிபர் மீது பெண் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பாறைகுளம் பகுதியை சேர்ந்தவர் ரீனா ( வயது 32), இவர் ஏற்கனவே மதுரையை சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடித்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை சட்டபடி பிரிந்து தனிமையில் நட்டாலம் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் ரீனாவின் தாயார் வீட்டின் (திக்குறிச்சி)அருகில் வசித்து வந்த ரதீஷ் குமார் ( வயது 36) என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த போது, முகநூலில் ரீனாவுக்கு நண்பனாக அறிமுகம் ஆனார்.. அதை ரீனாவும் ஏற்றுக்கொண்டுள்ளார். தொடர்ந்து இருவரும் தினமும் முகநூல் மூலமாக பேசி வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் தொலைபேசி எண்களை மாற்றிக்கொண்டு தினமும் பேசி வந்துள்ளனர். அப்போது ரதீஷ்குமார் ரீனாவை ஏற்கனவே காதலித்தாகவும் அப்போது அதை ரீனாவிடம் கூற தைரியம் இல்லாமல் இருந்ததால் கூறவில்லை எனவும், திடீரென ரீனாவுக்கு திருமணம் ஆனதால் அதை மறந்து விட்டதாகவும் தற்போது ரீனா கணவரை பிரிந்து தனிமையில் இருப்பதாலும், குழந்தைகள் இல்லாததால் உன்னையே திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

அப்போது எந்த ஆதாரவும் இல்லாமல் தனிமையில் இருந்த போது தனக்கு ரதீஷ் குமார் கூறிய வார்த்தைகள் கவர்ந்ததாகவும் நாளடைவில் இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வரும் ரதீஷ் தாயார் வீட்டிற்கு வந்து விட்டு சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரிய கோவில்களுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு, ரீனாவின் வீட்டிற்கு வந்து ரீனாவுடன் பல நாட்கள் தங்கி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில நேரங்கள் ரதீஷ் வீட்டிற்கு தெரியாமல் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு நேரடியாக ரீனாவின் வீட்டிற்கே வந்து தங்கி இருந்து விட்டு மீண்டும் வெளிநாட்டிற்கே சென்றுள்ளார். இதே போன்று வருடங்கள் கடந்தோடிய நிலையில் ரீனா தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ள ரதீஷ் குமாரிடம் வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் ரதீஷ் ஒவ்வொரு முறையும் அடுத்த முறை விடுமுறைக்கு வரும் போது திருமணம் செய்து கொள்வதாக கூறி வருடங்களை கடத்தி வந்துள்ளார் . இதற்கிடையே ரதீஷின் தங்கை திருமணத்திற்காக ரீனாவிடம் இருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ருபாய் ஆகியவற்றை கேட்டுள்ளார். எப்படியும் நம்மை தானே திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற நம்பிக்கையில் ரீனாவும் நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் ரதீஷ் ரீனாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துளார். ஏன் தன்னுடன் ரதீஷ் பேசவில்லை என ரீனா விசாரித்த போது ரதீஷ் குடும்பத்தார் அவனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்திருப்பது தெரியவந்தது. இதை அறிந்து ரீனா ரதீஷிடம் கேட்டுள்ளார். ஆனால் ரதீஷ் அப்படி ஒன்றும் இல்லை நான் உன்னை நான் திருமணம் செய்வேன் நீ என் மனைவி உன்னை யாருக்கும் விட்டு கொடுக்கமாட்டேன் என்று மீண்டும் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி உள்ளார்.

ஆனால் தொடர்ந்து ஏமாற்றபடுவதை அறிந்த ரீனா மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், மகன் வெளிநாட்டில் இருந்து அடிக்கடி ரீனா வீட்டிற்கு வந்துள்ளதை அறிந்து பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காதல் என்ற போர்வையில், கணவனை இழந்த பெண்களை கவர்ந்திழுக்கும் இளைஞர்கள் இருக்கிறார்கள். அதே போல கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஒரு சிலர் சொல்லும் ஆசை வார்த்தையை நம்பி போனால் தெருவில் நிற்பது உறுதிதான் என்று இந்த சம்பவம் பாடமாக மாறியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top