பொண்டாட்டியின் குளிக்கும் வீடியோ எடுத்ததால் வந்த வினை - தூத்துக்குடியில் பயங்கரம்!

பொண்டாட்டியின் குளிக்கும் வீடியோ எடுத்ததால் வந்த வினை - தூத்துக்குடியில் பயங்கரம்!

in News / Local

கோவில்பட்டி அருகேயுள்ள கயத்தாறு செட்டிக்குறிச்சி என்னும் சாலையில் ஒரு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் விரைந்து வந்து அந்த சடலத்தை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். பின்னர் அது சம்பந்தமான விசாரணையிலும் இறங்கினர். இறந்தவர் கயத்தாறை அடுத்துள்ள கம்மாப்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்தவர் என்றும், பெயர் மில்டன்ராஜ் என்பதும் தெரியவந்தது. அதனால் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மில்டன்ராஜ் ஒரு கட்டிட தொழிலாளி. வயது 35. கல்யாணமாகி ராணி என்ற மனைவியும், மிஷன் என்ற 3 வயது குழந்தை இருப்பதும் தெரியவந்தது. கடந்த 25-ம் தேதி அந்த பகுதியில் உள்ள சர்ச்சுக்கு போய்விட்டு வருவதாக கிளம்பி சென்றுள்ளார். ஆனால் ரொம்ப நேரமாக வீட்டுக்கு வரவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர். இதன்பிறகு மில்டன்ராஜின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, அதேபகுதியை சேர்ந்த விஜயன் என்னும் கொத்தனர், மில்டனுக்கு போன் செய்து பேசியுள்ளது தெரியவந்துள்ளது. பின்னர், போலீசார் விஜயனை மடக்கிபிடித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் பல பகீர் தகவல்கள் வெளியாகின.

இது சம்பந்தமாக விஜயன் வாக்குமூலம் தந்துள்ளார். அதில், என் மனைவி குளிப்பதை மறைந்திருந்து மில்டன் வீடியோ எடுத்துவிட்டார். அந்த வீடியோவை வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டி வந்தார். அதனால்தான் என் நண்பர்களின் உதவியுடன் மில்டனை கொன்றேன். அவர் வைத்திருந்த செல்போனில் என் மனைவியின் வீடியோ, போட்டோக்களையும் டெலிட் செய்துவிட்டேன் என்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top