கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே செறுதிகோணம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவர் குளியல் அறையின் மேல் பகுதி வழியாக சென்று தனது செல்போனில் பெண் குளித்துக்கொண்டிருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார் .
இதை கவனித்த அந்த பெண் அதிர்ச்சியடைந்து கூச்சிலிட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவரது மகன் பார்த்தார்.அப்போது வீடியோ எடுத்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை மடக்கிப் பிடித்து செல்போனை வாங்கி பார்த்தனர். செல்போனில் பதிவான காட்சிகள் அவர்களை அதிர்ச்சி அளித்தது.
செல்போனில் ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களின் படங்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து குலசேகரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து செல்போனை கைப்பற்றி வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments