குமரி தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்!

குமரி தபால் நிலையங்களில் ஆதார் சிறப்பு முகாம்!

in News / Local

குமரி மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் சேவை அமலில் உள்ளது. இதற்கான சேவை நாகர்கோவில், தக்கலை தலைமை தபால் நிலையங்கள், கோட்டார், நெய்யூர், மார்த்தாண்டம், குழித்துறை, குளச்சல், கன்னியாகுமரி, நாகர்கோவில் டவுண், சுசீந்திரம், வெட்டூர்ணிமடம், களியக்காவிளை, கருங்கல், குலசேகரம், திருவட்டார். ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம், அழகியபாண்டியபுரம், மணவாளக்குறிச்சி உள்பட 43 தபால் நிலையங்களில் புதிய ஆதார் கார்டுகள் எடுத்தல் மற்றும் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதார் தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த 43 தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாம் 3 நாட்கள் நடத்தப்படுகிறது. நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் நேற்று காலை நடந்த சிறப்பு முகாமை முதுநிலை அஞ்சலககோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார், தலைமை தபால் நிலைய அதிகாரி சொர்ணம், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர் துரை உள்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு முகாம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கிறது. மற்ற தபால் நிலையங்களில் வேலை நேரத்தில் மட்டும் ஆதார் கார்டு எடுக்கப்படும்.
இது குறித்து முதுநிலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகர் கூறியதாவது: தலைமை தபால் நிலையம் உள்பட 43 தபால் நிலையங்களில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆதார் சேவை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 43 தாபல் நிலையங்கள் மூலம் 260 புதிய ஆதார் கார்டு எடுக்கப்பட் டுள்ளது. 1514 ஆதார் கார்டுகள் திருத்தம் செய்யப்பட் டுள்ளது. பாஸ்போர்ட் சேவை கடந்த 28.2.2018ல் தொடங்கப்பட்டது. இதுவரை 13,683 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோல் கடந்த 1-9-2018ல் ஐபிபி என்ற வங்கி சேவை தொடங்கப்பட்டது. இது வரை தபால்துறை வங்கியில் 5778 பேர் கணக்கு தொடங்கி உள்ளனர்.
தபால் நிலையங்களில் ஆதார் எடுக்க முதலில் பணம் கட்ட வேண்டாம். திருத்தம் செய்வதற்கு ஒவ்வொருமுறையும் ரூ.50வீதம் கட்டணம் செலுத்தவேண் டும். மக்கள் மாவட்டத்தில் உள்ள 43 தபால் நிலையங்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top