மண்டைக்காடு அருகே விபத்து  : தம்பதி, குழந்தை படுகாயம்!

மண்டைக்காடு அருகே விபத்து : தம்பதி, குழந்தை படுகாயம்!

in News / Local

மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரத்தை சேர்ந்தவர் பினு(42). இவரது மனைவி ஜெயா(33). மகன் பினு லால்(8). இவர்கள் கடந்த 31ம் தேதி இரவு ராஜாக்கமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பைக்கில் வந்து கொண்டிருந்தனர். மண்டைக்காடு அருகே கூட்டுமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பின் அந்த பஸ்சை முந்த முயற்சித்தார். அப்போது எதிரே போலீஸ் ஜீப் வந்து கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பின் திடீர் பிரேக் போட்டார். இதில் நிலை தடுமாறிய பைக் கீழே விழுந்ததில் பினு, ஜெயா, பினு லால் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதைக்கண்ட போலீஸ் ஜீப் டிரைவரும் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டார். மேலும் போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஜீப்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top