ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜில் ரகளையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் பாறையடி கணியாகுளத்தை சேர்ந்தவர் ஜெயசெல்வா (47) இவரது மனைவி ஜெயந்தி ஜெஸ்டின் சைலா. உள் நோயாளியாகச் சிகிச்சை பெற்றுவரும் அவரைக் கவனித்துக் கொள்வதற்காக வந்த ஜெயசெல்வாவின் உறவினர் அமுதா என்பவரிடம் எப்படி தவறாக நடக்கலாம் என்று கூறி டாக்டர், நர்ஸ், மற்றும் மருத்துவ பணியாளர்களை ஜெயசெல்வின் கெட்டவார்த்தை பேசி, ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து கொலைமிரட்டல் விடுத்ததாகக் கல்லூரி முதல்வர் சுகந்திராஜகுமாரி ஆசாரிபள்ளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்பத்திரி ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்ததாக ஜெயசெல்வினை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments