நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

in News / Local

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை அடுத்து அது புரளி என்றும், மனநிலை சரியில்லாத ஒருவர் செய்த செயல் என்றும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் விஜய்க்கு சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இருப்பினும் அவர் தற்போது பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் உடனடியாக விஜய் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். ஆனால் சோதனையின் முடிவில் எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் இது வெறும் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது

இதனை அடுத்து இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து செய்தபோது, விழுப்புரத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தான் இந்த செயலை செய்தது என்பது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவருக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவரது குடும்பத்தினரிடம் இதுபோன்று இனிமேலும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top