ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் திருடன் கைவிரசை.

ஏ.டி.ஜி.பி. அலுவலக பெண் ஊழியர் வீட்டில் திருடன் கைவிரசை.

in News / Local

நாகர்கோவில் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியரின் வீட்டில் 32 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் கொள்ளையடித்தனர்.

நாகர்கோவில் புத்தேரியில் ஸ்ரீ எம்பெருமாள் 9-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன், இவர் திருவனந்தபுரத்தில் இரும்பு கடை ஓன்று நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரசன்னகுமாரி, சென்னையில் உள்ள ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பணி காரணமாக சென்னையிலையே தங்கி வேலை பார்த்து வருகிறார். கோபால கிருஷ்ணனும் தனது கடையிலேயே தங்கி விடுவது வழக்கம். அவ்வப்போது மட்டும் புத்தேரியில் உள்ள தனது வீட்டுக்கு வந்து செல்வார். இதனால் வீட்டை பிரசன்னகுமாரியின் தாயார் சந்திரகலாபரி பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு இரணியலில் உள்ள தன் மூத்த மகளின் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லை. இதைத் தொடர்ந்து நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏன் என்றால் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கம்பியை மர்ம நபர்கள் யாரோ உடைத்து வீட்டின் படுக்கை அறையில் உள்ள பீரோவை உடைத்து அதில் இருந்த 32 பவுன் நகை மற்றும் 1 லட்சத்து 38 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

பின்னர் இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டியவர்கள் ஏதேனும் தடயங்களை விட்டுச் சென்றுள்ளனரா? என்றும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டன. அதுமட்டுமின்றி மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வீட்டின் பல்வேறு இடங்களை மோப்பம் பிடித்த அந்த நாய், சிறிது தூரம் வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top